மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழிலும் சிறந்த குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தனக்கு கிடைத்த இடைவேளையில் தற்பொழுது ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கிற புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தில் தனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தனது பள்ளிக்கூட அனுபவங்கள், தனது தெய்வ நம்பிக்கை குறித்தெல்லாம் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இந்த புத்தகத்திருக்கு முன்னுரை எழுதியுள்ள நடிகர் மம்முட்டி, இந்த புத்தகத்தை பற்றி கூறும்பொழுது, “இது வெறும் புத்தகமல்ல.. மனோஜ் கே.ஜெயனின் சுயசரிதை என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அவரது வாழக்கையின் நிகழ்வுகளை மிகவும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.

