தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வடசென்னை. இந்த படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தபோதும் படத்தில் இடம் பெற்ற ஆபாச வார்த்தைகள் மற்றும் முதலிரவு காட்சிகளுக்கு வடசென்னை பகுதி மீனவ மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அதனால் அந்த காட்சிகளை தற்போது கத்தரித்துள்ளார் வெற்றிமாறன்.
மேலும், இந்த வடசென்னை படத்தை ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, கமல் விஸ்வரூபம் முதல் பாகத்தை இயக்கியபோது இரண்டாம் பாகத்திற்கு தேவையான பெரும்பாலான காட்சிகளை படமாக்கியது போன்று
வடசென்னை படத்தை படமாக்கியபோது இரண்டாம் பாகத்திற்கு தேவையான தேவையான நிறைய காட்சிகளை படமாக்கி விட்டாராம் வெற்றிமாறன். அத னால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் குறைவதோடு, முதல்பாகத்தை விட லாப மும் அதிகரிக்கும் என்கிறார்கள்.