விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் முதல்தோற்றம் வெளியானபோது அதில் அவர் புகைப்பிடித்தபடி காட்சி கொடுத்தார். அதற்கு அரசியல் வட்டாரங்களில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. விசயத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்று விட்டார்கள்.
இந்த நிலையில், அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் செகண்ட் போஸ்டரில் கைகளை விட்டபடி பைக் ஓட்டிக்கொண்டு வருகிறார் அஜீத். அதேசமயம் தலையில் அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார்.
ஒருவேளை அவர் ஹெல்மெட் அணியாமல் இப்படி கைகளை விட்டபடி பைக் ஓட்டியிருந்தால் இதுவும் சர்ச்சையாகியிருக்கும். இவரைப்பார்த்து ரசிகர்களும் கைகளை விட்டபடி சாலையில் பைக் ஓட்டுவார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் என்றொரு சர்ச்சை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால் அஜீத் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தலைக்கவசம் அணிந்திருந்தால் இதை யாரும் பெருசுபடுத்தவில்லை.