அட்டகத்தி நந்திதா தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள தேவி-2 படத்தில் சாரா என்றொரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் கல்கி படத்திலும் தற்போது இணைந்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து வந்த நிலையில், படத்தின் நாயகி யார் என்பது அறிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது கல்கி படத்தில் லீடு ரோலில் அட்டகத்தி நந்திதா நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. வழக்கமான நாயகியாக இல்லாமல் பர்பாமென்ஸ்க்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார் நந்திதா.
இதற்கு முன்பு தெலுங்கில் எக்கடிக்கு பொத்தவு சின்னவடு, ஸ்ரீனிவாசா கல்யாணம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் நந்திதா.