ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரும் படம் சர்கார். போஸ்டர் சர்ச்சை. கதை சர்ச்சை உள்ளிட்ட சில சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அதேபோல் தீபாவளிக்கு திரைக்கு வரும் இன்னொரு படமான விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்திற்கும் யுஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக்குழு. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள்.