ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 2.0. அடுத்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் நாயகியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏற்கெனவே, ஐ படத்தில் நாயகியாக நடித்த எமியை மீண்டும் 2.0 படத்தில் நடிக்க ஷங்கர் வாய்ப்பு கொடுத்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஐ படம் வெளிவருவதற்கு முன்பும் தனது பல்வேறு ஆபாசமான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார் எமி ஜாக்சன். அதனால், ஷங்கர் தனது ஐ படத்தின் இமேஜ் குறையும் என வருத்தப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும் அவர் 2.0 படத்திற்கு எமி மூலம் ஒரு இன்டர்நேஷனல் கலர் கிடைக்கும் என நடிக்க வைப்பதாகச் சொன்னார்கள்.
எமி ஜாக்சன் 2.0 படத்தில் நடித்து முடித்த பிறகும் அவரது ஆபாசமான படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவேற்றி வந்தார். இன்று மிகவும் ஆபாசமான புகைப்படம் ஒன்றை எமி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார். எமியின் இந்த செயல் 2.0 படத்தின் மீதான மதிப்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.