இன்றைய தேதியில் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வரும் காமெடி நடிகர் யாரென்றால் அது ‘யோகி’பாபு தான். இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் ‘கூர்கா’ படத்தின் மூலம் கதை நாயகனாகிவிட்டார்.
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் ‘கூர்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது! இதில் யோகி பாபு கூர்கா கெட்டப்பில் தோற்றமளித்தார். இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கனடா நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எலீசா நடிக்கிறார்/
விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் ஒரு சிறிய கேரக்டரில் எலீசா நடித்துள்ளார். ‘கூர்கா’ படத்தில் அமெரிக்கா அம்பாசிடர் வேடத்தில் நடிக்கிறாராம் எலீசா.

