சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் ‘என்.ஜி.கே.. செல்வராகவன் இயக்கிவரும் இந்த படம், முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு எதிர்பார்த்த வேகத்தில் முடிவடையததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இதற்கிடையில், கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது என படக் குழுவினர் தெரிவித்தனர். அதனால், மறுபடியும் இசை வேலையை ஆரம்பித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
இந்தமுறை, ஒரு டியூன் போட்டு, அதற்கான பாடலை, நயன்தாராவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனை அழைத்துள்ளார். அவரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு, பாடல் எழுதி இருக்கிறார்.

