குறுகியகால தயாரிப்பாக ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் சுசீந்திரன். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து, சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “கென்னடி கிளப்“ என்ற படத்தை இயக்குகிறார். சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன். இமான் இசை. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.
படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பழநியை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டில் வெளியிட உள்ளனர்.

