மீ டூ பாலியல் புகாரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. நானா பாடேகர், அலோக் நாத், விகாஸ் பால், சஜித் கான், அனு மாலிக் உள்ளிட்ட பல ஹாலிட் பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.
அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.