முண்டாசுப்பட்டி படத்தில் முனீஷ்காந்த் என்ற காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் ராமதாஸ். அதையடுத்து தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த அவர், சமீபத்தில் திரைக்கு வந்த ராட்சசன் என்ற படத்தில் சீரியசான போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார்.
இதுபற்றி ராமதாஸ் கூறுகையில், சினிமாவில் காமெடியனாகத் தான் நான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானேன். எனது திருமணத்திற்கு பிறகு என்னை சீரியசான வேடங்களுக்கும் ஒப்பந்தம் செய்கிறார்கள். ஒருவேளை திருமணத்திற்கு பிறகு என்னை பார்க்க சீரியசாக தெரிகிறதோ என்னவோ தெரியவில்லை. நான் ராட்சசன் படத்தில் சீரியசான போலீசாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அதனால், இனிமேல் காமெடி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்கிறார் ராமதாஸ்.