சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். அவருடன் நயன்தாரா, தம்பிராமைய்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
விஸ்வாசம் படம் குறித்த தியாகராஜன் கூறுகையில், விஸ்வாசம் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக ரிலீசாகிறது. தற்போது டீசர் வெளியிடும் வேலைகள் நடக்கிறது.
இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் அஜித். ஆளுமா டோளுமா பாடலைப்போன்று இந்த படத்தில் இரண்டு அதிரடியான பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறார் அஜித். இரண்டு பாடல்களையும் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றார்.