நயன்தாரா நடித்த, இமைக்கா நொடிகள் படத்தில் அவரது மகளாக நடித்தவர் காமெடி நடிகர், கொட்டாச்சியின், ஐந்து வயது மகள் மானஸ்வி. அந்த படத்தில் நடித்தபோது, நயன்தாராவை அம்மா என்று அழைக்கத் துவங்கிய மானஸ்வி, இப்போது வரை அவரை, ‘அம்மா’ என்றே அழைக்கிறார். அதோடு, அவ்வப்போது மொபைலிலும் நயன்தாராவுடன் பேசி மகிழ்வதாக சொல்லும் மானஸ்வி, ‘எப்போதும், என்னுடன் நீண்டநேரம் பேசும் நயன்தாரா, நடிப்பு குறித்து நிறைய, ‘டிப்ஸ்’ கொடுக்கிறார். அதனால், எதிர்காலத்தில், நயன்தாரா போன்று, பெரிய கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது…’ என்கிறார்.