நித்யாமேனன் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் பிரானா. ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை வி.கே.பிரகாஷ் இயக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசூல்பூக்குட்டி சவுண்ட் எபெக்ட்ஸ் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அனைத்துக் கட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட இந்த படம் திரைக்கு வருவதில் தாமதமாகி வந்தது. தற்போது விரைவில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது டுவிட்டரில், இந்த படத்திற்காக நீண்டநாள் காத்திருந்து நான் பொறுமையிழந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.