மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தபோது, மணிரத்னம் கதை சொன்னவிதமும், தனக்கான கேரக்டர் குறித்தும் புரிந்துகொள்ள முடியாததால் விலகினேன் என கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடிகர் பஹத் பாசில் கூறியிருந்தார்.
அதேபோல கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க சொல்லி பஹத் பாசிலை அணுகினார்கள் என்றும் அதற்கும் அவர் மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த விஷயம் உண்மைதான் என இப்போது பஹத் பாசிலே கூறியுள்ளார்.
ஆனால் ‘பேட்ட’ படத்திற்காக தன்னிடம் கேட்கப்பட்ட தேதிகளில், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த ‘வரதன்’ படத்திலும் நடிக்கவேண்டி இருந்ததால் ‘பேட்ட’ படத்தில் நடிக்க முடியாமல் போனது என விளக்கமளித்துள்ளார் பஹத் பாசில்.

