விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடந்தது. விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது:
மனசுக்கு தோன்றினால் அந்த இடத்திற்கு எந்த தயக்கமும் இன்றி செல்லும் கேரக்டர் விஜய் உடையது. பாதுகாப்பு உள்ளிட்ட எந்த காரணத்தையும் அத்தருணத்தில் அவர் பெரிதாக நினைப்பதில்லை. அவருடைய உண்மையான கேரக்டரை ஒட்டியே இந்தப் படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கான டீசர் விரைவில் வெளியிடப்படும். இப்படத்தின் ஆக் ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு தீனியாக அமையும்.