விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழகம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது.சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. பெங்கால் அணி 49.4 ஓவரில் 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் 72, கேப்டன் மனோஜ் திவாரி 47, ஷாபாஸ் அகமது 26, மஜும்தார் 39, சயான் மொண்டால் 16 ரன் எடுத்தனர். தமிழக பந்துவீச்சில் விஜய் ஷங்கர் 4, முகமது 3, கவுஷிக், வருண், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய தமிழகம் 42 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்து வென்றது. ஜெகதீசன் 55, அபினவ் முகுந்த் 94, அபராஜித் 43, முகமது 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திரஜித் 28*, கேப்டன் விஜய் ஷங்கர் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. சி பிரிவில் ஜார்க்கண்ட், அரியானா, குஜராத் தலா 18 புள்ளிகள் பெற்று முதல் 3 இடங்களில் உள்ளன. தமிழகம் (16 புள்ளி) 4வது இடத்தில் உள்ளது.

