பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசன், கடந்த ஜூன் 17ம் தேதி துவங்கியது.
ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, யாஷிகா, மும்தாஜ், பாலாஜி, சென்ட்ராயன், பொன்னம்பலம், மகத், டேனியல், ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, ரம்யா, மமதி, நித்யா உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வௌியேற்றப்பட்ட நிலையில், 67வது நாளில் விஜயலெட்சுமி 17-வது போட்டியாளராக வைலட் கார்ட்டில் இணைந்தார்.
முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் அதிகமாக இருந்தது. முதல் சீசன் 100 நாட்களை கடந்தது. இரண்டாவது சீசன் 105 நாட்களை கடந்தது.
இறுதிப்போட்டிக்கு ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி தேர்வாகினர். நேயர்களின் வாக்கு அடிப்படையில் ரித்விகா 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிக்பாஸ் டைட்டில் வென்றார்.
கமல், ரித்விகாவின் பெயரை அறிவித்ததும் கதறி அழுதார் ரித்விகா. அவரது பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தனது வெற்றியை அர்ப்பணித்தார். அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும், கோப்பையையும் பரிசாக வழங்கப்பட்டது.
															
