திருமணத்திற்கு பின், கேரக்டர் நடிகையாக களமிறங்கியுள்ள ஸ்ரேயா, தன் இணைய பக்கத்தில், புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து, ‘எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. ஒரு தெலுங்கு படத்திற்காக இப்படியொரு காட்சியில் நடித்துள்ளேன்… என்று விளக்கம் கொடுத்துள்ள ஸ்ரேயா, என்னைப் பொறுத்தவரை கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால், சரக்கு அடித்தபடி நடிப்பதில் கூட தவறில்லை…’ என்றும் கூறியுள்ளார். இன்னமும் கெடுகிறேன், பந்தயம் என்ன என்றது போல்

