சினிமாவில் நடிக்க வந்து எட்டு ஆண்டுகளான சமந்தாவுக்கு, தமிழ், தெலுங்கில் பாடகி சின்மயிதான், ‘டப்பிங்’ கொடுத்து வந்தார். தற்போது, தனக்குத்தானே, ‘டப்பிங்’ பேசத் துவங்கியுள்ளார், சமந்தா. ‘பிரதியுஷா’ என்ற சேவை அமைப்பு மூலம் சமூக சேவை செய்து வரும் அவர், அடுத்தபடியாக, ‘தன் திரைப்பட நிறுவனம் மூலம், சமூக நோக்கமுள்ள படங்களை தயாரித்து, தேசிய அளவிலான விருதுகளை அள்ள வேண்டும் என்பது தான், எதிர்கால திட்டம்…’ என்கிறார். ஆசைக்கு இல்லை, அளவென்ற எல்லை!

