சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தகுதி பெற்றார்.வுஹானில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதியில் சீனாவின் கியாங் வாங்குடன் (34வது ரேங்க்) மோதிய கோன்டாவெய்ட் (27வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி கியாங் வாங்கின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த அவர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி – அரினா சபலென்கா (பெலாரஸ்) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் கோன்டாவெய்ட் – சபலென்கா மோதுகின்றனர்.

