ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீசில் நவம்பர் 9ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளின் சவாலை சந்திக்கிறது. கயானாவில் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மான்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளம் வீராங்கனைகள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் 15 சர்வதேச டி20 போட்டிக்கும் குறைவாக விளையாடியவர்கள். புதுமுகமாக டி.ஹேமலதா இடம் பெற்றுள்ளார்.இந்தியா: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மித்தாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிகியூஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், ஏக்தா பிஷ்ட், டி.ஹேமலதா, மான்சி ஜோஷி, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி.

