பிரபல நடிகர், நடிகைகள் பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலே அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு விடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சில சமயங்களில் கூட்ட நெரிசலில் நடிகர், நடிகைகளும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஆனந்த் இல்ல திருமணத்திற்கு மனைவி சங்கீதாவுடன் சென்றிருந்தார் விஜய்.
அப்போது, அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியதால் விஜய்யும், சங்கீதாவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். அதோடு, அந்த திருமண மண்டபத்தில் உள்ள ஏராளமான சேர்கள் சேதமடைந்தன. அதனால், இனிமேல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று விஜய் முடிவு செய்துள்ளாராம்.
அதோடு, தனது மன்ற நிர்வாகிகளின் இல்ல திருமணங்கள் என்கிறபோது மணமக்களை தனது இல்லத்துக்கு அழைத்து வாழ்த்துவது என்று முடிவு செய்துள்ளார் விஜய்.

