மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகை மட்டுமின்றி நல்லதொரு பாடகியும் கூட. அவர் பாடிய பாடல்களில் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இனிமையான பாடலாகும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கூடாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது, பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே என்ற பாடலை போடுமாறு கூறி அந்த பாடலை ரசித்துள்ளார் ஜெயலலிதா. அதோடு, உங்கள் இசையில் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், இது மிகவும் பிடித்தமான பாடல் என்று ஏ.ஆர்.ரகுமானிடம் கூறினாராம் ஜெயலலிதா. இந்த தகவலை செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தனர்.

