நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்திருப்பவர் தனுஷ். தற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “வட சென்னை பற்றி விஷயங்களை பலரும் கேட்கிறார்கள். கருத்துள்ள ஒரு பாடலை நகைச்சுவையாக உருவாக்கி வருகிறோம். ஆல்பம் முடியும் தருவாயில் உள்ளது. இசைக்கலைஞர் தனுஷூம் சிறப்பான ஒரு விஷயத்தை செய்துள்ளார். விரைவில் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் டுவிட், தனுஷூம் இப்படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
