தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் வட சென்னை. இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வட சென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில், வடசென்னை கதைக்களமாக இருந்தாலும் ஹீரோவின் 30 வருட வாழ்க்கை தான் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வடசென்னை படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர் பெயரும் சமீபத்தில் வரிசையாக வெளியானது. இறுதியாக தனுஷின் கேரக்டர் பெயரும் வெளியானது. அதன்படி, அன்பு என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ்.
செப்டம்பர் மாதம் வெளியீடு என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 17-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? போஸ்ட் புரடக்ஷன் பணிகள் இழுத்துக் கொண்டே போவதால்தான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
