மலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடித்த ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். அதை தொடர்ந்து அவ்வளவாக பிரபலமாகாத ஒரு படத்தில் நடித்தவருக்கு ஜெய் ஜோடியாக ஜருகண்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தமிழுக்கு இழுத்து வந்தது. டாவு என்கிற இன்னொரு தமிழ்ப்படமும் கிடைத்தது.
இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஜெர்சி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் ரெபா மோனிகா. இந்தப்படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டையும் படித்த பின்னரே இயக்குனருக்கு ஓகே சொன்னாராம் ரெபா.நானி தற்போது நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபின் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாம்.
