திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று(ஆக., 11) நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரஷாந்த் ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், கருணாநிதியுடன் மூன்று ஆண்டுகள் நான் பயணித்து இருக்கிறேன், அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரஷாந்த், கருணாநிதியின் பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தேன். அவருடைய படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்று நம்முடன் அவர் இல்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

