சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய மகல், அதன் பிறகு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதை டவுன்லோட் செய்பவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக்கும் செயலியாக அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
கமலின் இந்த யுத்தி விமர்சனத்துக்குள்ளானது. அதேபோன்றதொரு சர்ச்சையையும், விமர்சனத்தையும் விஸ்வரூபம்- 2 படத்தில் கமல் செய்த ஒரு விஷயம் ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் நடித்துள்ள விஸ்வரூபம் – 2 படம், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது. படம் தொடக்கப்படுவதற்கு முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கமல்ஹாசன் ஏன் தொடங்கினார் என்பதை விவரிக்கும் விஷயங்களின் தொகுப்பாக ஒரு நியூல் ரீல் காண்பிக்கப்படுகிறது.
இதை மகல் ரசிகர்கள் ரசித்தாலும், கமல்ஹாசன் திட்டமிட்டுத் தன்னுடைய கட்சியை நம்மீது திணிக்கிறார் என்ற விமர்சனம் மக்களிடம் எழுந்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?
“மக்கள் நீதி மய்யத்தின் நீயூஸ் ரீல் இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக ‘விஸ்வரூபம் 2’ படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்கு மேடை கிடைத்தாலும், அங்கு பயன்படுத்துவேன். ஆனால், திரைக்கதையில் அதைத் தொடர்புபடுத்த மாட்டேன். படத்தின் கதையிலும் என் கட்சியை கலக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
விஸ்வரூபம்- 2 படம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக திரையிடப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நியூரீல் அவரது கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், சராசரி ரசிகர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

