மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடித்த தனுஷ், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வடசென்னை படத்தில் நடித்து வந்தபோது இந்த படத்தில் நடிக்கத் தொடங்கிய தனுஷ், சில மாதங்களிலேயே இந்த படத்தில் வேகமாக நடித்து முடித்து விட்டார். நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதையடுத்து, மாரி படத்தின் கதையும், கேரக்டரும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள தனுஷ், மீண்டும் மாரி வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக இணையத்தில் தெரிவித்துள்ளார்.
ஆக, இன்னும் ஓரிரு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மாரி படத்தின் மூன்றாம் பாகத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
