லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கதாநாயகி வேடங்களை விடவும் அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இந்த படம் தனக்கு நல்லபெயர் வாங்கித்தரும் என்று நம்புகிறார். இதனிடையே சண்டக்கோழி 2வில் தனக்கான படப்பிடிப்பு காட்சிகளை முடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
முன்னதாக படப்பிடிப்பை முடித்து கிளம்பும் முன்பு, யூனிட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
