கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதிக்கு, நடிகை த்ரிஷா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். த்ரிஷாவுடன் அவரது தாயார் உமாவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, “கருணாநிதியின் மறைவு அரசியல், சினிமா இரண்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பல திறமை கொண்ட மிகப்பெரிய மனிதர். அவரை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம் என்றார்.
