தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியில் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவரது குற்றச்சாட்டு காமெடி நடிகரையும் விட்டு வைக்கவில்லை.
தெலுங்கில் முன்னணி காமெடி நடிகர் பிருத்வி. தற்போது ஜெகன்மோன் ரெட்டியின் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீதும் பாய்ந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
பிருத்வி எப்படிப்பட்டவர் பெண்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு தெரியும். ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் சாலையில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவா?. அமெரிக்கா சென்ற நடிகைகளை கேட்டாலும் அவர் கொடுத்த தொல்லைகளை சொல்வார்கள். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

