கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என நடிகர் விக்ரம் கூறியுள்ளார். வெளியூரில் இருக்கும் நடிகர் விக்ரம், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது : தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், 5 முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமை கொண்ட கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் உள்ளேன். அவருடைய பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விக்ரம் கூறியுள்ளார்.

