டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் இருந்து அவருடன் பயணித்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடித்துள்ள மெகா படமான 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், டைரக்டர் ஷங்கரைப் பொறுத்தவரை எந்த விசயத்திலும் எளிதில் சமரசமடைய மாட்டார். அவரை திருப்திப்படுத்துவது ரொம்ப கடினமான விசயம்.
மேலும், 2.ஓ படத்தில் ஒரு பாடலை பார்த்தேன். எந்தவித கிராபிக்ஸ் பணிகளும் இல்லாமல் வித்தியாசமான முறையில் அவர் படமாக்கியிருந்தது மனதை டச் பண்ணி விட்டது. இதெல்லாம் ஷங்கரால் மட்டுமே சாத்தியம். அவரைப்போன்ற ஒரு சிறந்த சிந்தனையாளரை நான் ரொம்பவே மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

