ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளது.
அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ள அந்த பாடல் காட்சியில் நடிக்க நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய். நாளை அந்த பாடல் காட்சி அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் படமாக்கப்படுகிறது. ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் இணைந்து நடனமாட கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோரும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள்.

