ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவரும் ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு தரவில்லை என்பதால் மும்பை அணிக்காக ஆட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டிகளில் ஆடிய ரோகித் சர்மா டெஸ்ட் தொடரிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
ரோகித் சர்மா இடத்தை நிரப்ப கருன் நாயருக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் தாகூருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர் சரிவர பயன்படுத்தவில்லை என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

