மலையாளத்தில் தற்போது வாரிக்குழியிலே கொலபாதகம் என்கிற படம் தயாராகி வருகிறது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரெஜிஸ் மிதிலா என்பவர் இயக்கி வருகிறார். இயக்குனர் திலீஷ் போத்தன் கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். க்ரைம் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் அமெரிக்க பாடகரான கிரேடி லாங் மலையாளத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் பாடகர் கே.ஜே.யேசுதாஸின் முன்னிலையில் பல ஆயிரம் பேர் முன்னைலையில் ஆயிரம் கண்ணுமாய் என்கிற மலையாளப் பாடலை அட்சரம் பிசகாமல் பாடி யேசுதாஸிடம் பாராட்டு பெற்றார். அதை பார்த்து தான் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் மேஜோ ஜோசப் கிரேடியை அழைத்து இதில் பாட வைத்துள்ளாராம்.
