‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படம் மூன்று விதமான காலக்கட்டங்களில் பயணிக்கிறது. மெட்ராஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் வருகிற ஜூலை 12-ம் தேதி, மாலை 5 மணியளவில் 96 பர்ஸ்ட் லுக்கை வெளியிட போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
