இந்தவாரம் வெள்ளிக்கிழமை இரண்டு குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் ரிலீஸாக உள்ளன.
சிஎஸ் அமுதன் – சிவா கூட்டணியில் வெற்றிப்பெற்ற தமிழ்படம், படத்தின் இரண்டாம் பாகமான தமிழ்படம் 2, ஜூலை 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
முந்தைய பாகத்தை போன்று தற்போதைய தமிழ் சினிமா டிரண்ட்டை கலாய்த்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர், புரொமோஷன் என ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
ஜூலை 13-ம் தேதி கார்த்தி – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள கடைக்குட்டி சிங்கம் ரிலீஸாக உள்ளது. குடும்ப சென்ட்டிமென்ட் கலந்து, விவசாயத்தையும் முன்னிலைப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
இரண்டு வித்தியாசமான கதைகளம் மற்றும் யு சான்றுடன் ரிலீஸாக உள்ளன.
