தன்னுடைய சமூக செயல்பாடுகள் மூலம் மக்களை கவர்ந்த டிராபிக் ராமசாமியின் கதையை சமீபத்தில் படமாக்கினர். அந்தப் படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரே நடித்தார். நடிகர் ராஜேஷ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்களும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக, டிராபிக் ராமசாமி படத்தில் நடித்தனர். ஆனாலும், படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.
டிராபிக் ராமசாமியை நடிக்கச் சொல்லி, பல இயக்குநர்களும் வீடு தேடி வருகின்றனர். புது இயக்குநர் ஒருவர் சமூக பிரச்னையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் டிராபிக் ராமசாமியை, தியாகியாக நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு டிராபிக் ராமசாமியும் ஒப்புக் கொள்ள, திருமூர்த்தி மலைப் பகுதியில் நடக்கும் சூட்டிங்கில் கலந்து கொள்ள டிராபிக் ராமசாமி சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.