நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் சமீபத்தில், நடிகர் ரஜினியை சந்தித்து வெகு நேரம் பேசி இருக்கிறார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசி உள்ளனர்.
சங்கிலி முருகனின் அரசியல் ஆர்வம் குறித்து அறிந்து கொண்ட ரஜினி, ‘நீங்களும் ஏன், என்னோடு சேர்ந்து அரசியலில் களம் இறங்கக் கூடாது?’ என கேட்டிருக்கிறார். ‘அரசியல் பேசத்தான் எனக்கு ஆசை. செய்வதற்கு அல்ல’ என்று சொல்லி நழுவி இருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளராக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம். அதற்கு சிலரிடம் நான் பேச வேண்டும்; பேசிய பின் சொல்கிறேன்’ என சொல்லி அனுப்பி விட்டதாகக் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.