பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மகா அக்சய். இவரும் படங்களில் நடித்து வருகிறார். மகா அக்சய் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக மகா அக்சய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் அளிக்கும்படி மகா அக்சய் கோரியிருந்தார். ஆனால் மும்பை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே மகா அக்சய்க்கு ஊட்டியில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்தன. ஏராளமான விஐபி.,க்கள் ஊட்டியில் குவிந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண், டில்லி போலீஸிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து இந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.