சமீபத்தில் டுவிட்டரில் பதிலளித்த கமல், நான் ஜாதியை விரும்பாதவன். எனது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தபோது கூட ஜாதியை குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்படி ஜாதியை விரும்பாத கமல், தனது படத்திற்கு மட்டும் சபாஷ் நாயுடு என்று ஜாதிப்பெயரை வைத்திருப்பதேன்? என்கிற கேள்விகளும் எழுந்தன. அதனால் கமல் அந்த படத்தின் தலைப்பை மாற்றப்போவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து கமல் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பினை மாற்றும் எந்த திட்டமும் இல்லை. சபாஷ் நாயுடு தலைப்பில் ஜாதிப்பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் இது, சாதிப்பிரச்சாரம் செய்யும் கதை அல்ல என்று கூறியுள்ளார்.
