மிகுந்த சர்ச்சைகளுக்கிடையே வெளியான பத்மாவத் படத்தில் ராணி வேடத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில், ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கை தீபிகா காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் நவம்பர் 10-ந்தேதி இத்தாலியில் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக அவர்கள் இருவரது குடும்பத்தினரும் இத்தாலியில் முகாமிட்டு திருமணத்திற்கு தேவையான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
