மகாநதி படத்திற்கு பிறகு வழக்கமான கதாநாயகி வேடங்களில் நடிப்பதில் ஆர்வத்தை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் கைவசம் சண்டக்கோழி-2, சாமி-2, விஜய்-62 ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்து இன்னும் அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.
முக்கியமாக, தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும், தெலுங்கில் அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் கிளாமராக நடனமாட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால்தான், மகாநதிக்குப்பிறகு முன்னணி தெலுங்கு நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிவந்த போதும் அந்த படங்களை நாசுக்காக தவிர்த்து விட்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேடி வருகிறார்.

