தமிழில் சிங்கம்-3, தெலுங்கில் கட்டமராயுடு படங்களுக்குப்பிறகு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்த சபாஷ்நாயுடு படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் 2016ல் தொடங்கப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு பின்னர் தொடரவில்லை.
அதையடுத்து எந்த படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்காத நிலையில், தற்போது இந்தியில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் நானி நடிக்கும் ஜெர்சி என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ள ஸ்ருதி, தெலுங்கில் இன்னும் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

