மலையாளத்தை விட்டு தமிழில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரோ என சந்தேகம் வரும் விதமாக, தமிழ்ப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் என்பவர் இயக்கிவரும் தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வளவு நாள் பெயரிடப்படாமல் இருந்த இந்தப்படத்திற்கு தற்போது வான் என டைட்டில் வைத்துள்ளனர். இந்தப்படத்தில் நிவேதா பெத்துராஜ் உட்பட நான்கு நாயகியர் நடிக்கின்றனர். ஒருநாள் கூத்து படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படம் தவிர கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார் துல்கர் சல்மான்.