இந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது தமன்னா நடித்து வருகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படத்திற்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குடும்பப் பெண் கெட்டப்பில் கண்ணாடி அணிந்த நிலையில் தமன்னாவின் போட்டோ ஒன்று இணைதளங்களில் வைரலாகி உள்ளது. இது மகாலட்சுமி படத்தில் தமன்னாவின் லுக் என்று கூறப்படுகிறது. தற்போது இணையதளங்களில் இந்த போட்டோ வைரலாகியுள்ளது.