பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார் ஜூலி. அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கை படத்தில் நடிப்பவர், அடுத்தப்படியாக அம்மன் தாயி என்ற பக்தி படத்தில் நடிக்கிறார்.
புதியவர் அன்பு ஹீரோவாக அறிமுகமாகிறார். சரண் என்ற புதுமுகம் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். ஜூலி, அம்மன் தெய்வமாக நடிக்கிறார். இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் – சந்திரஹாசன் இயக்கி தயாரிக்கின்றனர்.
அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார் ? என்பதே படத்தின் ஒரு வரிக்கதை.
அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக எப்படி விரதமிருப்பது? எப்படி தெய்வங்களை வழிபடுவது? இந்துக்களின் சாங்கிய, சம்பிரதாயங்கள் என்னென்ன? என அத்தனையையும் தெரிந்து கொண்டார். அம்மன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் ஒரு இந்துவாகவே மாறி முறைப்படி விரதங்கள் இருந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்தார் என்கிறார்கள் இயக்குநர்கள்.
விரைவில் படத்தின் ஆடியோ வெளியாக உள்ள நிலையில் படத்தை அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.